பொங்கலையொட்டி காரைக்குடியில் மண் பொருட்கள் விற்பனை தீவிரம்: மண் பானை விற்பனை அதிகரிப்பால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி

காரைக்குடி: பாரம்பரியத்துக்கு மக்கள் மத்தியில் அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதால் காரைக்குடியில் மண்பாண்ட பொருட்களின் விற்பனை கலைக்கட்டியுள்ளது. காரைக்குடி அருகே சாலையோரத்தில் சுடுமண்ணில் உருவாக்கப்பட்ட பானைகள், குதிரைகள், தட்டுகள், யானை, மணி உள்ளிட்ட கலைநயமிக்க அழகு பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றனர்.

மானாமதுரை முதல் நாகர்கோவில் வரை தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் மண்பாண்டங்கள் அங்கே விற்பனைக்காக கோட்டையூரில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மண்பாண்ட பொருட்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். இயற்கையான வாழ்வியல் முறைக்கு தற்போது மக்கள் திரும்பி வருவதால் மண்பாண்டங்கள் அதிகளவில் விற்கப்படுவதால் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு