பொங்கல் பண்டிகையை ஒட்டி நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை – தூத்துக்குடி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் மற்றும் தாம்பரம் – நெல்லை இடையே முன்பதிவுடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியதாவது;

தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்:
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து நாளை (ஜனவரி 13 மற்றும் ஜனவரி 16 தேதிகளில்) நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்தில் இரவு 9.50க்கு புறப்படும் ரயில் விருத்தாசலம், திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக நெல்லை செல்லும்.

மறுமார்க்கத்தில் ஜனவரி 12, 14, 17ம் தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை வந்தடையும். தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயிலில் பயணிக்க பயணிகள் இன்றில் இருந்து முன்பதிவு செய்யலாம்.

சென்னை – தூத்துக்குடி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்:
சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை தாம்பரத்தில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14 மற்றும் ஜனவரி 16ல் ) சிறப்பு ரயில் தூத்துக்குடி செல்லும். கடலூர், மயிலாடுதுறை வழியாக தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி வழியாக செல்லும். காலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் தூத்துக்குடி – சென்னை தாம்பரத்துக்கு திங்கள் மற்றும் புதன்கிழமை (ஜனவரி 15, ஜனவரி 14ம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படும். என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்