பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் படகு சேவை 4 மணி நேரம் நீட்டிப்பு

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் வரும் 15ம்தேதி முதல் 17ம் தேதி வரை 3 நாட்களுக்கு படகு சேவை 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் காலையில் சூரிய உதயம், மாலையில் அஸ்தமனத்தை பார்த்து ரசிக்கின்றனர்.
இது தவிர கடல் நடுவே அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு சேவை தினமும் காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டு மாலை 4 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. ஆகவே தொடர் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர். அவர்கள் படகு சவாரி செய்யவும் விரும்புவார்கள். எனவே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை 3 நாட்களுக்கு படகு சவாரி 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும் படகு சேவை அன்றைய நாட்களில் காலை 6 மணிக்கே தொடங்கப்பட உள்ளது. அதேபோல் மாலை 4 மணிக்கு படகு சேவை முடிவதற்கு பதிலாக மாலை 6 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 3 நாட்களுக்கு கூடுதலாக 4 மணிநேரம் படகு சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் சிரமமின்றி படகு சவாரி செய்ய முடியும்.
தற்போது விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே கடலில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு