பொங்கலுக்கு 5 நாள் முன்னதாகவே வங்கிகளில் வந்து விழுந்தது மகளிர் உரிமைத்தொகை: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

சென்னை: பொங்கலுக்கு 5 நாள் முன்னதாக நேற்றே மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வங்கி கணக்குகளில் வந்துவிழுந்ததால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. ஒரு கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், 1 கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்போது மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

அந்த தொகை மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 11 லட்சத்து 85 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் வரப்பெற்றுள்ளதால், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாதம்தோறும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 5 நாள் முன்னதாக நேற்றே மகளிர் உரிமை தொகை ரூ.1000 பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பொங்கல் பரிசுதொகை ரூ.1000த்துடன் மகளிர் உரிமை தொகையும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மாதம் அரசு தரப்பில் இருந்து ரூ.2000 ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைத்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கலைக் கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்