புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு :முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று. ஒப்பந்த ஓட்டுநர்களின் மாத ஊதியத்தை ரூ.10,804/- லிருந்து, ரூ.16,796/- ஆகவும். ஒப்பந்த நடத்துனர்களின் மாத ஊதியத்தை ரூ.10,656/-லிருந்து ரூ.16.585/-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் திரு ந ரங்கசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

உயர்த்தப்பட்ட இந்த மாத ஊதியத்திற்கான ஆணையினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போக்குவரத்து ஆணையரும் புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநருமான, Dr.A.S. சிவக்குமார் அவர்களிடம் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (04.07.2024) வழங்கினார். இந்த ஊதிய உயர்வு 2024, ஜூன் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்ச்சியின் போது சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம்.R புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் பொது மேலாளர் (நிர்வாகம்) திரு வி.கலியபெருமாள் ஆகியோர் உடனிருந்தார்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது