விபத்தில் பாலிடெக்னிக் மாணவன் படுகாயம்; ரூ.47 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

கடலூர்: மோட்டார் வாகன விபத்தில் அடிபட்டு படுகாயம் அடைந்த நிலையில் வலது கால் துண்டிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர், கோட்டக்கரை நாயுடு தெருவை சேர்ந்த சங்கர் மகன் சஞ்சு க்கு இழப்பீடாக ரூ.47,00,000 கொடுக்க வேண்டுமென்று கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர், கோட்டக்கரை நாயுடு தெருவை சேர்ந்த சங்கர் மகன் சஞ்சு கடந்த 04.02.2023 அன்று இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது லோடு கேரியர் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. மேற்படி விபத்தில் அடிப்பட் சஞ்சுக்கு வலது கால் துண்டிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக அவர் நஷ்ட ஈடு பெற்றுத்தர கோரி கடலூர் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன் சத்யா ஆகியோர்கள் மூலம் கடலூர் 2-வது சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர். மேற்படி வழக்கில் இன்று 09.03.2024-ம் தேதி நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சஞ்சுக்கு நஷ்ட ஈடாக ரூ.47,00,000 கொடுக்க வேண்டுமென்று முதலாவது சிறப்பு மாவட்ட நீதிபதி உயர்வி.ஆனந்தன் , முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி  வேதியப்பன்  உத்தரவு நகல் வழங்கினார்கள்.  வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!