வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி வகுப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது. வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதலாம் கட்ட பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2ம் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டாம் சீரற்றமயமாக்கல் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான த.பிரபுசங்கர், திருவள்ளுர் பாராளுமன்ற (தனி) தொகுதி பொது பார்வையாளர் அபு இம்ரான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், உதவி ஆணையர் (கலால்) ரங்கராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சத்திய பிரசாத் (தேர்தல்), சித்ரா (கணக்கு), தேர்தல் வட்டாட்சியர் சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை