வாக்குப்பதிவு முடியும் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்கவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி அன்றும் மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி தமிழகத்தில் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ம் தேதி மாலை 6 மணி வரை மதுபான கடைகள் மூடப்பட உள்ளது. இதேபோன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதியும் மதுபான கடைகள் மூடப்படும். தமிழகத்தில் இதற்கான உத்தரவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Related posts

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்

குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு