அரசியலுக்காக பொய்களை பரப்பும் சந்திரபாபு நாயுடுவை கண்டிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெகன்மோகன் கடிதம்

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருமலை கோயிலில் நெய்யை வாங்குவதற்கு முன் அதன் தரத்தை பரிசோதிக்க வலுவான நடைமுறைகள் இருப்பதால், கலப்படம் செய்யப்பட்ட நெய்யை கொண்டு பிரசாதம் தயாரிக்க இயலாது. இரண்டு மாதங்களுக்கு முன் டேங்கர் லாரி நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையில், அதுவும் தனது ஆட்சிக்கு 100 நாட்கள் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிக் கூட்டத்தில் பொய்யான கருத்துகளை சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

சந்திரபாபுவின் குற்றச்சாட்டு முற்றிலும் பொறுப்பற்ற அறிக்கை மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக செய்யப்பட்ட அப்பட்டமான பொய்யாகும். இந்த முக்கியமான தருணத்தில் ஒட்டுமொத்த நாடும் உங்களைப் கவனிக்கிறது. பொய்களைப் பரப்பும் சந்திரபாபுவை கடுமையாகக் கண்டிக்கப்படுவதும், உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதும் மிகவும் அவசியமானதாகும். இது கோடிக்கணக்கான இந்து பக்தர்களின் மனதில் ஏற்படுத்தியிருக்கும் சந்தேகங்களைப் போக்கவும், தேவஸ்தான புனிதத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும்; தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு அன்புமணி வரவேற்பு!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை!

தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு!