அரசியல் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு இம்ரான் தடையாக உள்ளார்: மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளுக்கு இம்ரான் கான் பெரிய தடையாக இருப்பதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரியில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிடுவதற்கு இம்ரான் கானுக்கு தடை விதிக்கப்பட்டது.

பல வன்முறைகளுக்கு இடையே நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்) கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளன. 3 முறை பிரதமராக இருந்தவரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(என்) தலைவருமான நவாஸ் ஷெரீப் கட்சி எம்பிக்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் நவாஸ் கூறுகையில்,‘‘அரசியல் பிரச்னைகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கான், ஆர்வம் காட்டவில்லை. பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் இம்ரான் கான் பெரிய தடையாக உள்ளார். இதில் சம்மந்தப்பட்ட ஒரு தரப்பு ஆர்வம் காட்டாத போது பேச்சுவார்த்தை எப்படி வெற்றி பெறும். நட்புரீதியாக பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு தயக்கம் காட்டுகிறார். இம்ரான் கான் வீடு அமைந்திருக்கும் பனிகாலா என்ற இடத்துக்கும் சென்று வந்தேன். எங்கள் நேர்மையை பலவீனமாக கருதுகின்றனர்’’ என்றார்.

Related posts

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!