தந்தையை போல் கொள்கைகளுக்காக அமைச்சர் பதவியை துறப்பதற்கும் தயார்: சிராக் பஸ்வான் அறிவிப்பு

பாட்னா: பீகாரின் பாட்னாவில் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சிராக் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பஸ்வான், ‘‘எனது தந்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது அமைச்சராக இருந்தார். தலித்துக்களின் நலனுக்கு கேடு விளைவிக்கும் பல விஷயங்கள் அப்போதும் நடந்தன. பொது நிகழ்ச்சிகளில் பாபா சாகேப் அம்பேத்கரின் படங்கள் கூட வைக்கப்படவில்லை.

அதனால் நாங்கள் பிரிந்துவிட்டோம். நானும் எனது தந்தையை போன்றவன் தான். கொள்கைகளில் சமரசம் செய்வதற்கு பதிலாக அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். தற்போதைய ஆட்சியானது தலித்துக்கள் குறித்த எனது கவலைகளை புரிந்துகொள்வதாக இருக்கிறது. உதாரணமாக கிரிமிலேயரில் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை கூறலாம். நரேந்திரமோடி பிரதமராக இருக்கும் வரை நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பேன்” என்றார்.

Related posts

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை