சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை தான் வடிவமைத்ததாக பொய்கூறிய குஜராத்தைச் சேர்ந்த நபரை கைது செய்தது போலீஸ்

குஜராத்: சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை தான் வடிவமைத்ததாக பொய்கூறிய குஜராத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி என்பவரை கைது செய்துள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானி என்றும் விக்ரம் லேண்டரை தான் வடிவமைத்ததாகவும் செய்தியாளர்களுக்கு மிதுல் திரிவோதி பேட்டி அளித்தார்.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் விதமாக, இஸ்ரோவால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்திலிருந்து கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 23) மாலை 6 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன் மூலம் இந்தியா, நிலவின் தென் துருவ பகுதியில் தடம் பதித்த முதல் நாடாகவும், ஒட்டுமொத்தமாக நிலவில் தடம் பதித்த நான்காவது நாடாகவும் வரலாற்றில் தடம் பதித்தது. அதைத் தொடர்ந்து, சந்திரயான்-3ன் திட்ட இயக்குநராகச் செயல்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த வீர முத்துவேல் உட்பட அதில் பணியாற்றிய விஞ்ஞானிகள் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை தான் வடிவமைத்ததாக பொய்கூறிய குஜராத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி என்பவரை கைது செய்துள்ளனர். சந்திரயான்-3 விண்கலத்தின்விக்ரம் லேண்டர் நிலவில் கால் பதித்தது குறித்து சூரத்தை சேர்ந்த மிதுல் திரிவேதி என்பவர் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ நான் இஸ்ரோவில் பணியாற்றும் பிஎச்டி பட்டதாரி. சந்திரயான்-2 திட்டத்தின் ஒருபகுதியாக நான் இருந்ததால் சந்திரயான்-3 வடிவமைக்கவும் எனக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்தது.

அதன்படி சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றினேன். விக்ரம் லேண்டரின் அசல் வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்தேன். இதுதான் அது வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க காரணம்” என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டியில் உண்மையில்லை என்று செய்திகள் வௌியாகின.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று மிதுல் திரிவேதி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

கீழடி அகழாய்வில் பெரிய அளவில் செப்பு பொருட்கள் கண்டெடுப்பு

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவெள்யூ நீதிமன்றம் ஆணை