காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

செங்கல்பட்டு: காவல் நிலையத்தில் குவிந்துள்ள நூற்றுக்கணக்கான பறிமுதல் வாகனங்களை ஏலம் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் நூற்றுக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் 10க்கும் அதிகமான ஷேர் ஆட்டோக்கள் பல மாதங்களாக செங்கல்பட்டு நகர காவல் நிலைய வளாகத்தில் குவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. எனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் புதர்மண்டி கிடப்பதால் காவல் நிலையத்தில் அடிக்கடி பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிக அளவில் வருகின்றது. எனவே செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை