அனுமதி இல்லாமல் வெளிநாட்டிலிருந்து நிதி உதவி கேரள எதிர்க்கட்சித் தலைவர் மீது போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

திருவனந்தபுரம்: அனுமதி இல்லாமல் வெளிநாட்டிலிருந்து நிதியுதவி வாங்கியதாக கூறி கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கேரள எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் வி.டி.சதீசன். இவர் எர்ணாகுளம் மாவட்டம் பரவூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் கேரளாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் இவரது தொகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது தன்னுடைய தொகுதி மக்களுக்கு உதவுவதற்காக புனர்ஜனி என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்கினார்.

இந்த திட்டத்திற்காக அரசின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டில் இருந்து சதீசன் நிதியுதவி பெற்றதாக புகார் எழுந்தது. எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் சதீசன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்கா செல்வதற்கு முன் இந்த உத்தரவில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றுள்ளார். தற்போது தொடக்க கட்ட விசாரணைக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், உத்தரவு வெளியானவுடன் எர்ணாகுளம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Related posts

“ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்” : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்