போலீசாருக்கு மனித உரிமை கல்வி: அரசுக்கு திருமாவளவன் டிவிட்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட பதிவு: விசாரணை என்னும் பெயரில் குரூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி பல்வீர்சிங் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான குற்ற விசாரணை நடத்த வேண்டும். மனித உரிமை மீறல், மனித சித்ரவதை, அதிகார வரம்புமீறல் போன்றவை துறை சார்ந்த விதிமீறல்கள் அல்ல; கிரிமினல் குற்ற நடவடிக்கைகளாகும். எனவே, கிரிமினல் வழக்கு தொடுத்து தலையீடுகள் ஏதுமின்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினருக்கு மனித உரிமைக் கல்வியை வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும். அதிகாரி என அவரை பாதுகாத்திட முனைவது அறமல்ல.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது