மக்களை பாதுகாக்கும் காவல்துறையினரை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை: பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: என்னுடைய துறை சார்ந்த நிகழ்ச்சி என்பதால் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன் என சென்னையில் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அவர் பேசியதாவது; சட்டம்-ஒழுங்கு நிலை சிறப்பாக இருப்பதால்தான் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் முன்னணி தமிழ்நாடு மாநிலமாக திகழ்கிறது. சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பதங்கங்களை வழங்கும் முறையை தொடங்கி வைத்தவர் கலைஞர். காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்தால் அதற்குரிய பாராட்டும், பலனும் வந்து சேரும் எனவும் பேசியுள்ளார். காவலர்களின் நலனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் கடத்தல் மற்றும் சைபர் குற்றங்களை விசாரிக்க சிறப்பு திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. குற்றங்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியான மாநிலத்தில்தான் வளமும் நலமும் இருக்கும்; அதில் முக்கிய பங்காற்றுவது காவல்துறை. சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் காவலர்களை பாராட்டுகிறேன். மக்களை பாதுகாக்கும் காவல்துறையினரை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்தே சென்னை காவல்துறை சிறப்பாக இருந்து வந்துள்ளது. சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்று தர வேண்டும். குற்றங்கள் நடப்பதற்கு முன்பே அதனை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகம் குற்றச் சம்பவங்களில் பூஜ்ஜியம் குறியீடாக இருக்க வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.

பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை

சென்னை: பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கணவர், பெற்றோர் வசிக்கும் இடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்கப்படும். ‘மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது பெண் காவலர்களுக்கு விரும்பும் இடங்களில் பணி வழங்கப்படும். மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள் அவர்களின் சொந்த ஊரில் 3 ஆண்டுகள் பணியாற்ற அனுமதி என அவர் பேசியுள்ளார்.

Related posts

அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்காவிட்டால் மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் கிளை

ஊட்டி – குன்னூர் சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு மாடு

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது