பள்ளி மாணவிகள் மத்தியில் விஷம பேச்சு: சொற்பொழிவாளர் மீது போலீசில் புகார்


சென்னை: சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் வில்சன் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 28ம் தேதி பரம்பொருள் பவுண்டேசனை சார்ந்த மகாவிஷ்ணு என்பவர் நிகழ்த்திய சொற்பொழிவின்போது, மாற்றுத்திறனாளிகள் கை இல்லாமல், கால் இல்லாமல் பிறப்பதற்கு அவர்கள் தங்கள் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியம்தான் காரணம் என்று மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இவரது பேச்சு மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்செயலாகும். எனவே மேற்படி மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டப்படியும், 2016 ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் பிரிவு 72(அ)வின் படியும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இந்த புகாரின்படி சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை