கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார்: நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு முகாமில் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உயரதிகாரிகள் உத்தரவுப்படி விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேநேரம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஒவ்வொரு வாரம் புதன்கிழமைகளில் தமிழ்நாடு இயக்குநர் அலுவலகம், மாநகர காவல் ஆணையரகங்கள், மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் கட்டாயம் பொதுமக்களிடம் புகார் மனுக்கள் பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி தற்போது ஒவ்வொரு புதன் கிழமைகளில் தமிழ்நாடு முழுவதும் டிஜிபி அலுவலகம் உட்பட்ட அனைத்து மாநகர காவல் ஆணையரகங்கள், மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் மக்களிடம் புகார்களை நேரடியாக பெற்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று குறைகள் தீர்ப்பு முகாமில் புகார் அளிக்க வந்த பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். பிறகு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை