சபரிமலையில் பக்தர் மீது போலீசார் மீண்டும் தாக்குதல்: விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் இந்த மண்டல, மகர விளக்கு சீசனில் போலீசார் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த சில பக்தர்களை 18ம் படியில் வைத்து போலீசார் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த ஒரு பக்தர் சன்னிதானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ் என்ற பக்தர் உள்பட 22 பேர் சபரிமலைக்கு வந்தனர். ராஜேஷ் தனது நண்பரின் 6 வயது மகனுடன் 18ம் படி ஏறிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் சீக்கிரமாக ஏறும்படி கூறி அவரை சரமாரியாக தாக்கினார். இதில் அவரது முதுகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சன்னிதானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து அறிந்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர், அதிகாரிகள் ஆகியோர் சன்னிதானம் எஸ்பி ஆனந்திடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பக்தரை தாக்கிய போலீஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். இது குறித்து விசாரணை நடத்த கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா