அடுக்கடுக்கான புகார்களில் சிக்கிய காவல் உதவி ஆய்வாளர் ஆயுதபடைக்கு மாற்றம்: எஸ்பி உத்தரவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக மோகன் பணியாற்றி வந்தார். படாளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான புழுதிவாக்கம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்ததாக படாளம் காவல் நிலையத்திற்க்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பொக்லைன் இந்திரம் மூலம் மணல் அள்ளி வந்ததை தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது யாரிடம் அனுமதி பெற்று மண் அள்ளி வந்ததாக கேட்டுள்ளனர். அதற்கு மண் அள்ளிய நபர் படாளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் என்பவரிடம் லஞ்சம் கொடுத்து மணல் அள்ளியதாக கூறியுள்ளார். இதேபோல், போக்சோ வழக்கு ஒன்றை செங்கல்பட்டு கோட்ட துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை படாளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் சரியாக விசாரிக்காத காரணத்தினால் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காப்பாளரிடம் புகார் அளித்து உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், படாளம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் ஒருமையில் பேசுவது என மோகன் மீது தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இதேபோன்று, படாளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்ததின் பேரில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத், படாளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகனை ஆயுதபடைக்கு மாற்றி நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்