செங்கல்பட்டு அருகே 2,950 கிலோ கடத்தல் கஞ்சா தீவைத்து அழிப்பு: போலீஸ் நடவடிக்கை

செங்கல்பட்டு : சட்டவிரோத போதைப்பொருளை ஒழிப்பதற்கான மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கூடுதல் காவல்துறை இயக்குனர், EBCID அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநிலம் முழுவதும் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலிசாரால் 89 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2950 கிலோ கஞ்சாவை போதைபொருள் ஒழிப்பு குழுமத்தின் மேற்பார்வையில் செங்கல்பட்டு தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள GJ Multiclave-ல் தீயிலிட்டு அழிக்கப்பட்டது.

இணை ஆணையர் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை), காவல் கண்காணிப்பாளர் (போதைபொருள் நுண்ணறிவு பிரிவு) மற்றும் துணை இயக்குனர் (தடய அறிவியல் துறை) ஆகியோர்கள் அடங்கிய குழுவினரால் மேற்படி கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.

மேலும் போதைபொருள் நுண்ணறிவுபிரிவு போலிசாரால் கடந்த மார்ச் 2024 ல் 3685 கிலோ, ஆகஸ்டு 2024ல் 6165 கிலோ மற்றும் 30.09.2024 ஆம் தேதி 2950 கிலோ முறையே 2024 ஆம் ஆண்டில் இதுவரை 12800 கி.கி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

போதைபொருள் கடத்தல்/ உபயோகப்படுத்துதலை முற்றிலும் தடுக்கவும், அதன் ஆபத்துகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்தகைய நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் போதைபொருட்களை முற்றிலுமாக ஒழிக்க NIB-CID போலிசார், போதைபொருள் குற்றவாளிகளின் வலையமைப்பை (Network) தொடர்ந்து கண்காணிக்க சட்டம் ஒழுங்கு காவல்துறையினருடன் இணைந்து பிறமாநில போலிசார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பினருடன் நெருக்கமாக பணியாற்றிவருகின்றனர்.

மேலும் பொதுமக்கள், போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் 10581 என்ற கட்டணமில்லா உதவி எண்ணிலும், 9498410581 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை : வனத்துறை எச்சரிக்கை

மூலவரை தரிசித்த சூரிய பகவான்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே சரக்கு தோணி போக்குவரத்து ஓரிரு நாட்களில் துவக்கம்