போலீசில் குறை தீர் மனுக்கள் விசாரணை

 

கோவை, ஏப்.27: கோவை மாவட்ட போலீசில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் சட்டத்திற்குட்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. நேற்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தலைமையில் மாவட்ட அளவிலான குறை தீர்ப்பு முகாம் நடந்தது. இதில் குடும்பம், பணப்பரிமாற்றம், மற்றும் இடப்பிரச்னை தொடர்பான 105 மனுக்கள் மீது மறு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 102 மனுக்கள் சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு