அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்க பொதுமக்கள்:ஒத்துழைக்க வேண்டும் காவல்துறை வேண்டுகோள்

 

அரியலூர், மே1:அரியலூர் மாவட்டத்தில் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிவேகம், மது போதை, அஜாக்கிரதை மற்றும் கவன குறை காரணமாக இதுவரை 27 இருசக்கர வாகன விபத்துகள் நடைபெற்றுள்ளன.இதில் 21 இருசக்கர வாகன விபத்துகளில் அதிவேகம் மற்றும் வாகன கட்டுப்பாட்டு இன்றி தானாக கீழே விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22.மீதமுள்ள 6 இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கியவர்கள் காயம் மற்றும் படுகாயம் அடைந்தனர்.அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றும் பொருட்டு பல்வேறு போக்குவரத்து சீர் நடவடிக்கைகள், வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொது மக்களிடையே போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
மக்கள் அனைவரும் இருசக்கர வாகனத்தை இயக்கும் பொழுது தலைக்கவசம் அணிந்து, சாலை விதிகளை முறையை பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறும், அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் அரியலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை