கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் விவகாரம்; உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருத்துவர்கள் இருப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகின்றனர்.

மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச் சாராயம் அருந்து 39 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். பின்னர், உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.

 

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்