விஷ சாராய பலி 66 ஆனது: மேலும் 2 பேரை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவராமன் (41) என்பவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி கருணாபுரம் பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், புதுவை மடுகரை மாதேஷ் உள்பட 22 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கண்ணுக்குட்டி உள்பட 11 பேரை சிபிசிஐடி போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதில் கண்ணுக்குட்டி கொடுத்த வாக்குமூலத்தின் படி பரமசிவம் மற்றும் முருகேசனை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்