விஷ சாராயம் வழக்கு 21 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விஷச்சாராயம் அருந்தி 8-பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே செய்யூர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 6 பேரையும் சிபிசிஐடி போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். 3 நாட்கள் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஏடிஎஸ்பி மகேஸ்வரி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் செய்யூர் பகுதியை சேர்ந்த அம்மாவாசையன், சந்துரு, வேலு, ராஜேஷ், நரேஷ்குமார், விஜயகுமார் ஆகிய 6 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 21 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், மேலும், செங்கல்பட்டில் ஒருவர் மற்றும் மரக்காணத்தில் 3 பேர் என, 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை