விஷ சாராய வழக்கில் மேலும் 2 பேர் கைது: ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 66 பேர் பலியான வழக்கில் கருணாபுரம் பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், விஜயா உள்பட 11 பேரை சிபிசிஐடி போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் தம்பதியர் கொடுத்த தகவலின்படி கண்ணுக்குட்டியின் மைத்துனர் பரமசிவம்(43), சித்தப்பா முருகேசன் (36) ஆகியோருக்கும் விஷ சாராய பலி வழக்கில் சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது.

சாராய வியாபாரிகளான இருவரும் ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைதான பரமசிவம், முருகேசன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Related posts

வயநாட்டை தொடர்ந்து அடுத்த மேகவெடிப்பு; இமாச்சலும் உருக்குலைந்தது: 5 பேர் பலி:50 பேர் மாயம்

இதுபோன்ற ஒரு பேரழிவை இந்திய ராணுவம் பார்த்ததில்லை: மேஜர் ஜெனரல் வினோத் மேத்யூ பேட்டி

புதையுண்ட கிராமங்களில் மீட்பு பணி தீவிரம்; வயநாட்டில் நிலச்சரிவு பலி 300ஐ தாண்டியது: 300க்கும் மேற்பட்டோரை இன்னமும் காணவில்லை