விஷ சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் விற்பனைக்கு தடை : ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பெண்கள் உட்பட 50 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு உயிரிழந்தோரின் குடும்பத்திற்குத் தலா 10 லட்சம் ரூபாயும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணையும் நடத்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதே போல, கடந்த ஆண்டு கள்ளச்சாராயத்தால் பலர் பலியாகினர் என்பதும், ஓராண்டுக்குள் கள்ளக்குறிச்சியில் 35க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்ற செய்தி, மிகுந்த வேதனை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்குக் காரணமான காவல் உட்பட அனைத்து நிலை அரசு ஊழியர்கள் அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும். சாதாரணப் பணியிட மாற்ற நடவடிக்கை மட்டும் போதாது. இந்தச் சம்பவத்திற்குத் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். விஷச்சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தனாலை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும்.

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி