விஷச் சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: விஷச் சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இரண்டாவது நாளாக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். நேற்று பேரவை கூட்டத்தை புறக்கணித்த அதிமுகவினர் இன்று பங்கேற்றனர். சபாநாயகர் வேண்டுகோளை மீறி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் விஷச் சாராயம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில், நீதியை நிலைநாட்ட நீதி விசாரணை நடத்த வேண்டும். கள்ளச்சாரயத்தில் கலக்கப்படும் மெத்தனால் ஆந்திராவில் இருந்து வருவதாக சொல்கிறார்கள். இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை என்பதால் சிபிஐ விசாரணை கேட்கிறோம். விவாதத்துக்கு பயந்து நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்யவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

கொடைக்கானலில் சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி விற்ற 3 பேர் கைது..!!

நன்றி ரோஹித், ஜெய் ஷாவுக்காகவும் உங்களுக்காகவும் இந்த முடிவை எடுத்தேன்: ராகுல் டிராவிட்

மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு உறுதி