பொய்கை சந்தையில் இன்று கால்நடைகள் வரத்து அதிகரிப்பால் விற்பனை அமோகம்: ரூ.80 லட்சம் வர்த்தகம்

வேலூர்: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகமாக இருந்தால் விற்பனை அமோகமாக இருந்தது. தமிழகத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தைகளில் வட மாவட்டங்களில் பெயர்பெற்றது வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இச்சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக உள்ளூர் நாட்டு கறவை மாடுகள், கலப்பின கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், உழவு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுகள், எருமைகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

சாதாரணமாக இங்கு ஒரு நல்ல கறவை மாடு என்பது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்துக்கு மேல் வரை அதன் தரத்துக்கும், கறவை திறனுக்கும் ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்தான் காளைகள், உழவு மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கால்நடைகள் மட்டுமின்றி அதோடு இணைந்த காய்கறி சந்தையும் இங்கு நடக்கிறது. சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ரூ.70 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும். இந்நிலையில் இன்று நடந்த மாட்டு சந்தையில் ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

விற்பனையும் அமோகமாக நடந்தது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கோடை முடிந்து தற்போது தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவன தட்டுப்பாடு இல்லை. மேலும் விவசாயிகளும் காடுகளை விற்பனை செய்ய தயங்குகிறார்கள். இதனால் மாடுகள் வரத்து சற்று குறைந்துள்ளது. தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வந்தது. இவைகளில் விலை அதிகமாக உள்ளது. இதனால் விற்பனையும் ரூ.80 லட்சம் வரை நடந்தது. விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

சந்திரபாபு நாயுடு நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் பெற்ற சர்வேயர் சஸ்பெண்ட்

கோவையை சேர்ந்த நகை வியாபாரியிடம் ஓடும் ரயிலில் 600 கிராம், ரூ.8.46 லட்சம் கொள்ளையடித்த 6 பேர் கும்பல் கைது

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி ஜனாதிபதி உரையில் எதுவும் இல்லாதது வேதனை தருகிறது: மணிப்பூர் எம்.பி. ஆதங்கம்