பொய்கை மாட்டுச்சந்தையில் ₹90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

*விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

வேலூர் : பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ரூ.80 முதல் 90 லட்சம் வரை கால்நடை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.வேலூர் அடுத்த பொய்கையில் வழக்கம்போல் நேற்று செவ்வாய்கிழமை மாட்டுச்சந்தை நடந்தது. இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக 105 டிகிரி வரை வாட்டி வதைக்கும் வெயிலால், பொய்கை மாட்டு சந்தையில் கால்நடைகளின் வரத்து குறைவாக காணப்பட்டது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்காக அதி
களவு கொண்டு வரப்பட்டு, வியாபாரம் நடந்தது.இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ‘தேர்தல் நடைமுறை, கோடை வெயில் காரணங்களால், பொய்கை மாட்டு சந்தைக்கு கால்நடைகளின் வரத்து குறைந்தது.

கத்திரி வெயில் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வரும் காலங்களில் கால்நடைகள் வரத்து அதிகரிக்கும். அதேநேரத்தில் இன்று கால்நடைகள் வரத்து என்பது சுமாராகவே இருந்தது.
900 மாடுகள் விற்பனைக்கு வந்தது. இதன் மூலம் ரூ.80 முதல் ரூ.90 லட்சம் வரை வியாபாரம் நடந்திருக்கலாம்’ என்றனர்.

Related posts

கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு