பொய்கை மாட்டு சந்தையில் ₹1.50 கோடி வர்த்தகம்

*விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

வேலூர் : பொய்கை மாட்டுச்சந்தையில் தேர்தல், கோடை வெயிலுக்கு பின்னர் நேற்று கால்நடைகள் குவிந்த நிலையில் ரூ.1.50 கோடி வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பால், உரிய ஆவணமின்றி ₹50 ஆயிரத்து மேல் பணம் எடுத்து சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 105 டிகிரிக்கு மேல் கொளுத்திய வெயிலால், கடந்த சில வாரங்களாக பொய்கை மாட்டு சந்தையில் கால்நடைகளின் வரத்து குறைவாக காணப்பட்டது.
இதற்கிடையில், தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழையினால், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த சந்தையில் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்பட்டு, வியாபாரமும் ₹1.50 கோடி வரை நடந்ததாக கால்நடை வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ‘தேர்தல், கோடை வெயில் காரணங்களால், பொய்கை மாட்டு சந்தைக்கு கால்நடைகளின் வரத்து குறைந்தது. தற்போது, வெயிலின் தாக்கம் குறைந்தது, கோடை மழை, தேர்தல் பணம் பறிமுதல் இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களால் நேற்று பொய்கை சந்தை 900 மாடுகள் விற்பனைக்கு வந்தது. இதன்மூலம் ₹1.50 கோடி வர்த்தகம் நடந்தது’ என்றனர்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி