பொடுகு பிரச்னையா..?

பொடுகு காரணமாக தலையில் அாிப்பு ஏற்படும். முடி உதிர்வதற்கு பொடுகும் ஒரு காரணம். மேலும் தலையின் சருமத்தைச் சேதாரம் செய்வதில் முக்கியப் பங்கு பொடுகுக்கு உண்டு. இதில் இரண்டு வகையான பொடுகுகள் உள்ளன. ஒன்று வெள்ளையாக பொடி போல் ஷோல்டர் உட்பட உதிரும். மற்றொன்று கிட்டத்தட்ட மெழுகு பாணியில் தலையில் ஒட்டிக்கொண்டிருக்கும். பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு இதோ சில வழிகள்…
* மருதாணி இலையை அரைத்து சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்த்தால் பொடுகு நீங்கும்.
* தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகு காணாமல் போகும்.
* தேங்காய்ப் பால் எடுத்து அதை கைகளில் ஊற்றி நன்கு தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து மிதமான சுடு நீரில் அலசினால் பொடுகு மறையும்.
* தயிர், முட்டையின் வெள்ளைக்கரு, மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தடவி பிறகு சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு இருக்காது.
* முதல் நாள் சாதம் வடித்த கஞ்சியை மறுநாள் அதை தலையில் ஊற்றி தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.
* மிளகு தூளுடன் பால் சேர்த்து அதை தலையில் சிலநிமிடங்கள் ஊற வைத்து பின் குளித்தால் பொடுகு போகும்.
* துளசி, கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து எலுமிச்சைப் பழ சாறுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.
* வேப்பிலை கொழுந்து, துளசி இரண்டையும் மை ேபால் அரைத்து அதை தலையில் தேய்த்து பிறகு சிறிது நேரம் விட்டு குளித்தால் பொடுகு விலகும்.
* வசம்பை பவுடராக்கி தேங்காய் எண்ணெயில் நன்கு ஊறவைத்து பிறகு தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
* குளித்து முடித்து கடைசியில் குளிக்கும் தண்ணீரில் வினிகர் கலந்து குளித்தால் பொடுகு போகும்.
* நெல்லிக்காய்த் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலை மாவு ஒன்றாய்க் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். வாரம் ஒரு முறை செய்து வந்தால் பொடுகு வராது.
* தலையில் கொஞ்சம் தயிர் விட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.
– காகை ஜெ. ரவிக்குமார்

Related posts

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, வரவேண்டிய 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்பு

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

காவல் துறையினர் சார்பில் பழங்குடியினருக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு