பாக்கெட்ல ஒரே ஒரு பிஸ்கட் தான் மிஸ்சிங்… 1 லட்ச ரூபா நஷ்டஈடு தரணும்

சென்னை: ‘பிஸ்கட் பாக்கெட்டில் ஒரே ஒரு பிஸ்கட் மிஸ்சிங்’ ஆனதாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு தரணும் என்று நுகர்வோர் நீதிமன்றம பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை எம்எம்டிஏ மாத்தூரை சேர்ந்த பி.டில்லிபாபு என்பவர் தனது தெருவில் திரியும் நாய்களுக்காக அருகில் உள்ள கடையில் மேரி லைட் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அந்த பிஸ்கட் பாக்கெட்டின் கவரில் உள்ளே 16 பிஸ்கட் இருப்பதாக அச்சிடப்பட்டிருந்தது.

ஆனால், கவரை பிரித்து பார்த்தபோது அதில் 15 பிஸ்கட்டுகள்தான் இருந்தது. இதையடுத்து, அந்த கடையிலும், பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி நிறுவனத்தையும் டில்லிபாபு தொடர்பு கொண்டபோது உரிய பதில் கிடைக்க வில்லை. இதையடுத்து, தனக்கு இழப்பீடு கோரி டில்லிபாபு திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகார் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ஒரு பிஸ்கட்டின் விலை 75 பைசா. ஐடிசி நிறுவனம் தினமும் 50 லட்சம் பாக்கெட் பிஸ்கட்டுகளை தயாரிக்கிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.29 லட்சத்தை அந்த நிறுவனம் நுகர்வோரிடம் இருந்து மோசடி செய்கிறது என்றார். அதற்கு ஐடிசி நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிஸ்ெட் பாக்கெட் எண்ணிக்கை அடிப்படையில் பேக்கிங் செய்யப்படுவதில்லை. மாறாக எடையின் அடிப்படையில்தான் பேக்கிங் செய்யப்படுகிறது. ஒரு பாக்கெட்டின் எடை 76 கிராமாகும் என்றார்.

இதையடுத்து, பிஸ்கட் பாக்கெட்டை எடைபோட்டபோது அது 74 கிராமாக இருந்தது தெரியவந்தது. அப்போது, ஐடிசி நிறுவனம் தரப்பு வழக்கறிஞர் ஒவ்வொரு பாக்கெட்டிலிலும் 4.5 கிராம் வித்தியாசம் இருக்க விதிகள் உள்ளது என்றார்.இதை ஏற்க மறுத்த நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர்கள், வானிலை காரணமாக சில பொருட்கள் காய்ந்து எடை குறையலாம். ஆனால், பிஸ்கட் அதுபோன்று எடை குறையும் பொருள் இல்லை. எனவே, குறைபாடுகளுக்காக மனுதாரர் டில்லிபாபுவுக்கு ஐடிசி நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு தரவேண்டும்.மேலும், வழக்கு செலவாக ரூ.10 ஆயிரத்தையும் நிறுவனம் மனுதாரருக்கு தரவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது