‘பாஜ மதவாத மதவெறி கட்சி’ மக்கள் வரிப்பணத்தில் பிரதமர் மோடி விளம்பரம்: திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள வயலூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அதிமுக மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: பாரதிய ஜனதா கட்சி, ஒரு மதவாத கட்சி. மதவெறி பிடித்த கட்சி என்பதால்தான், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினோம். ரயில் நிலையங்களை கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நவீனப்படுத்துவதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஏற்கனவே இருந்த ரயில்களை பெயிண்ட் அடித்து, நிறம் மற்றும் பெயர்களை மாற்றி, வடிவத்தையும் மாற்றி ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். முன்பு திண்டுக்கல்லில் இருந்து ரூ.500 கட்டணத்தில் சென்னை சென்று வந்தோம்.

ஆனால், தற்போது ரூ.3,000 செலவு செய்து டிக்கெட் எடுத்து சென்னை செல்ல வேண்டியுள்ளது. வந்தே பாரத், தேஜஸ், மெட்ரோ என ரயில்களுக்கு பல பெயர் வைத்து, நாடு முழுவதும் புதுவகையான கொள்ளையில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது. மக்களின் வரிப்பணத்தை எடுத்து தினசரி செய்தித்தாள், ஊடகங்களில் பிரதமர் மோடி விளம்பரம் செய்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் பதவியை பிடுங்கி விடுவேன் என ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார். யார் பதவியை யார் புடுங்குவது? தெய்வத்தின் அமைப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

Related posts

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கலுக்கு மத்தியில் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை மறுநாள் அமல் : பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க புதிய தொழில்நுட்ப வசதிகள்

காஞ்சிபுரம் அருகே ஓடும் காரில் தீ