பிஎம்எல்ஏ கட்டுப்பாடுகள் அடிப்படை உரிமைக்கு இடையூறாக இருக்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: புனேவில் உள்ள சிவாஜிராவ் போசலே சககரி வங்கியில் நடந்த பண மோசடி தொடர்பாக ஜாதவ் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாதவ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே 72 வயதாகும் ஜாதவ் நீண்டகாலம் சிறையில் இருப்பதாகவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தான் சிகிச்சை பெறவும் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ் ஜம்தார் அளித்த உத்தரவில், ‘‘மனுதாரர் அதிகபட்ச தண்டனையில் பாதி காலத்தை சிறையில் நிறைவு செய்து விட்டார்.

மேலும் 250 சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியிருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருக்கும் நிலையில் அந்த விசாரணை இன்னும் தொடங்கவில்லை. எனவே விசாரணை விரைவில் முடிய வாய்ப்பில்லை. சட்டவிரோத பணி பரிவர்த்தனை சட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், அரசியலமைப்பு 21ல் வழங்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைக்கு அவை இடையூறாக இருக்க முடியாது. மேலும், பிஎம்எல்ஏவின் சட்டப்பிரிவு 45ன்படி, மனுதாரர் 60 வயதுக்கு மேற்பட்டவர், நோய்வாய்ப்பட்டவர், குற்றம் செய்யவில்லை என நம்புவதற்கான காரணங்கள் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது’’ என கூறி உள்ளார்.

Related posts

இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்!

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கோயில், கட்டிடங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

இலங்கை அதிபர் தேர்தல்; புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க!