கர்நாடகாவில் அமித்ஷா, ராகுல் ஆகியோர் முற்றுகையிட்டிருந்த நிலையில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்

* 8 மாவட்டங்களில் 6 பொதுக்கூட்டம்
* 4.5 கி.மீட்டர் நடந்து சென்று வாக்குச் சேகரிப்பு

சென்னை: பெங்களூரில் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 8 மாவட்டங்களில் 6 பொதுக்கூட்டங்கள் மற்றும் 2 நடைபயணம் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கர்நாடகா மாநில சட்டபேரவைக்கு வரும் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர். பாஜ வேட்பாளர்களை ஆதரித்து ஒன்றிய அரசின் பெரும்பான்மை அமைச்சர்கள் மாநிலத்தில் முகாமிட்டு பரப்புரை செய்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி 3 நாட்கள் சூறாவளி பிரசாரம் ெசய்து வந்தார். பிரியங்கா காந்தியும் சூறாவளி பிரசாரத்தில் குதித்துள்ளார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இன்று மற்றும் நாளை இரு நாட்கள் பிரதமர் மோடி பரப்புரை செய்கிறார். இன்று காலை 9 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பகல் பெலகாவி மற்றும் விஜயபுரா மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குடச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மாலை பெங்களூரு வரும் பிரதமர், மாகடி சாலையில் தொடங்கி சுமனஹள்ளி வரை 4.5 கி.மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார்.

ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை காலை பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோலார் மாவட்டம் செல்கிறார். கோலார் மற்றும் சிக்கபள்ளாபுரா மாவட்டங்களி்ல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கோலார் நகரில் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின் அங்கிருந்து பகல் 1 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் ராம்நகரம் மாவட்டம், சென்னப்பட்டனாவில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹாசன் மாவட்டம், பேலூர் பேரவை தொகுதியில் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மைசூரு செல்லும் பிரதமர். ஜெஎஸ்எஸ் வித்யா பீடம் முதல் பன்னிமண்டபம் வரை 5 கி.மீட்டர் ரோடு ஷோ நடத்துகிறார். பிரதமர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 2 நாட்கள் தொடர் பிரசாரத்தில் 8 மாவட்டங்களில் 6 பொதுக்கூட்டம் மற்றும் 2 சாலையில் நடை பயணம் மூலம் பிரசாரம் செய்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. சி.ஓட்டர்ஸ் கருத்து கருப்பில் காங்கிரஸ் கட்சி 116 முதல் 136 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று வெளியிட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக அனைத்து யுக்திகளையும் கையாண்டு வருகிறது. இதனால்தான் பிரதமர் மோடி 2 நாட்கள் சூறாவளி பிரசாரத்தில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்கம் காணவில்லை..! ஜோஷிமடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா குற்றச்சாட்டு!

பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நகைச்சுவையாகவோ, பொது வெளியிலோ சண்டாளர் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது: மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்