எதுவும் மாறாதது போல பிரதமர் மோடி பாசாங்கு: குடியரசு தலைவர் உரைக்கு கார்கே விமர்சனம்

புதுடெல்லி: குடியரசு தலைவர் உரையை குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, எதுவும் மாறாதது போல பிரதமர் மோடி பாசாங்கு செய்வதாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமர் மோடி அரசால் எழுதப்பட்ட குடியரசு தலைவரின் உரையை பார்க்கும்போது, 400க்கும் கூடுதலான இடங்கள் என்ற அவரது முழக்கத்தை நாட்டு மக்கள் நிராகரித்துவிட்டனர் . மோடியால் இத னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதனால் அவர் எதுவும் மாறவில்லை என்பது போல் பாசாங்கு செய்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால் மக்கள் மாற்றத்தை கேட்கிறார்கள். குடியரசு தலைவர் உரையில், நீட் பிரச்னைக்கு தீர்வு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூரில் வன்முறை, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், ரயில் விபத்துக்கள், ரயில்களில் பயணிகளின் அவலநிலை மற்றும் தலித்துக்கள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்றார்.

Related posts

தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

யானை நடமாட்டம்: கம்பம் அருகே சுருளி அருவியில் குளிக்க 2வது நாளாக தடை

சாதி வாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் வலியுறுத்தல்