பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையை எதிர்த்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு

சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையை எதிர்த்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேரம் தியானத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். இதையொட்டி அங்கு கடற்படையினர் மற்றும் 11 எஸ்பிக்கள் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களவை தேர்தலின் இறுதி கட்ட மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடக்க உள்ள நிலையில், பிரதமர் மோடி தியானம் என்ற பெயரில் மறைமுக பிரசாரம் செய்ய இருப்பதாக குற்றம்சாட்டி இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையை எதிர்த்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா