பிரதமர், உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் காணவில்லை: தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்

குஜராத்தில் ஐந்து ஆண்டுகளில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளதாக்க தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, 2016ல் 7,105 பெண்களும், 2017ல் 7,712 பேரும், 2018ல் 9,246 பேரும், 2019ல் 9,268 பெண்களும், 2020ல் 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர். மொத்த எண்ணிக்கை 41,621 ஆக உள்ளது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, அகமதாபாத் மற்றும் வதோதராவில் ஒரு வருடத்தில் (2019-20) 4,722 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா கூறுகையில்:
சில காணாமல் போன வழக்குகளில், சிறுமிகள் மற்றும் பெண்கள் அவ்வப்போது குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுவதை அவதானித்துள்ளேன். காணாமல் போனோர் வழக்குகளை சீரியஸாகக் கையாள்வதில்லை என்பதுதான் காவல் துறையின் பிரச்சனை. இது போன்ற வழக்குகள் கொலையைக் காட்டிலும் தீவிரமானவை.

அதற்குக் காரணம், ஒரு குழந்தை காணாமல் போனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கிறார்கள். கொலை வழக்கைப் போலவே இந்த வழக்கையும் கடுமையாக விசாரிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார். “காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகள் ஆங்கிலேயர் காலமுறையில் விசாரிக்கப்படுவதால் காவல்துறையால் அடிக்கடி புறக்கணிக்கப்படுகிறது” என்று கூறினார்.

முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குனர் டாக்டர் ராஜன் பிரியதர்ஷி கூறுகையில்:
சிறுமிகள் காணாமல் போனதற்கு மனித கடத்தல் தான் காரணம். “எனது பதவிக் காலத்தில், பெண்கள் காணாமல் வழக்குகளில் பெரும்பாலானோர் சட்டவிரோத மனித கடத்தல் குழுக்களால் கடத்தப்பட்டு வேறு மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதை நான் அறிந்தேன்.

“நான் கேடா மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) இருந்தபோது, அந்த மாவட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு ஏழைப் பெண்ணைத் தூக்கிச் சென்று தனது சொந்த மாநிலத்தில் விற்று, அங்கு வேலைக்குச் சேர்த்தார். நாங்கள் அவளைக் காப்பாற்றினோம், ஆனால் பல சமயங்களில் இது நடக்காது,” என்று கூறினார்.

குஜராத் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஹிரேன் பேங்கர், “கேரளாவில் பெண்களைப் பற்றி பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள், ஆனால் நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் காணவில்லை என்று கூறினார்.

Related posts

திருப்பத்தூரில் கடன் பிரச்சனையால் 2 குழந்தைகள் அடித்துக்கொலை

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி