பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வின் மறுகூட்டல் முடிவுகள் 4ம் தேதி வெளியாகும்

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தேர்வின் மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் 4ம் தேதி வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக நடந்த பொதுத் தேர்வுகளில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ மாணவியருக்காக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடந்தது. அந்த தேர்வில் பங்கேற்ற மாணவ மாணவியரில் சிலர் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித் தேர்வர்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் 4ம் தேதி பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.

இந்த பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்த மாற்றமும் இல்லை. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித் தேர்வர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Related posts

மின்வாரிய அதிகாரிகளுக்கு செந்தில்பாலாஜி எச்சரிக்கை..!!

அரியலூரில் காலணி உற்பத்தி ஆலை அமைக்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.

ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் பேட்டி