பிளஸ்1 தேர்வு மறுகூட்டல் ரிசல்ட் நாளை வெளியாகிறது

சென்னை: பிளஸ் 1 தேர்வு எழுதி மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரிசல்ட் நாளை வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பிளஸ் 1 படித்து வந்த மாணவ மாணவியருக்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தேர்வு முடிவுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் சந்தேகம் இருப்பவர்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்யவும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. அதன்படி விண்ணப்பித்த மாணவர்களுக்கு மறு கூட்டல் செய்யப்பட்டது.

அதில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண்கள் பட்டியல் www.dge.gov.in என்ற இணைய தளத்தில் நோட்டிபிகேஷன் பகுதியில் நாளை(21ம்தேதி), பிற்பகல் வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாளில் எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related posts

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!

ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி!!