பிளம் கேக் பால்ஸ்

தேவையான பொருட்கள் :

பிளம் கேக் / ஃபுரூட் கேக் – 2 கப்
பட்டர் க்ரீம் – 3-4 டேபிள் ஸ்பூன்
டார்க் சாக்லேட் – ஒரு கப்
ஸ்பிரிங்கல்ஸ் (Sprinkles) – தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஒரு பௌலில் பிளம் கேக் அல்லது ஃபுரூட் கேக்கை உதிர்த்து விட வேண்டும். பின் அதில் பட்டர் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் அதை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து குளிர வைக்கவும். பிறகு ஒரு பௌலில் டார்க் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கிக் கொள்ளவும். பின் ஃப்ரிட்ஜில் உள்ள உருண்டைகளை எடுத்து, ஒவ்வொரு உருண்டையின் மேல் ஒரு ஸ்பூன் உருகிய சாக்லேட்டை ஊற்றி, மேலே ஸ்பிரிங்கல்ஸ் தூவி, சில நிமிடங்கள் அப்படியே விட்டால், சுவையான ப்ளம் கேக் பால்ஸ் தயார்.

Related posts

விநாயகர் சதுர்த்தி: கொழுக்கட்டை ஸ்பெஷல்

காளான் பாஸ்தா

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்