பிளாட்பார்ம் டிக்கெட் இனி ஜிஎஸ்டி இல்லை: கவுன்சில் கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜிஎஸ்டி தொடர்பாக அரசு எதிர்கொள்ளும் வழக்குகளை குறைப்பதற்காக, ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு ரூ.20 லட்சம், உயர் நீதிமன்றத்திற்கு ரூ.1 கோடி, உச்ச நீதிமன்றத்திற்கு ரூ.2 கோடி என தொகை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கவுன்சில் நிர்ணயித்ததை விட தொகை வரம்பு குறைவாக இருந்தால் வரி ஆணையம் மேல்முறையீட்டுக்கு செல்லாது.

இதுதவிர, ரயில்வே வழங்கும் பிளாட்பார்ம் டிக்கெட், ஓய்வு அறைகள், காத்திருப்பு அறைகள் போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களுக்கு வெளியே மாணவர்கள் தங்கும் இடத்திற்கு வழங்கப்படும், மாதம் ரூ.20,000 வரையிலான தங்கும் விடுதி வாடகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது 90 நாட்கள் வரையிலும் பிஜி, ஹாஸ்டல் போன்றவற்றில் தங்கும் மாணவர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பலன் அளிக்கும். இதைத்தவிர, அனைத்து வகை பால் கேன்களுக்கும் 12% ஜிஎஸ்டி வரி விதிக்க கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது