பள பள பிளாஸ்டிக் ஃபேஷன் ஷோ!

பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிட்டு பலவகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் சுற்றுச்சூழலியல் ஆய்வாளர்கள். இருப்பினும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு இருந்துக்கொண்டே இருக்கிறது. சுற்றுச்சூழல் ஆய்வாலர்கள், கல்வியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதென்பது எப்போதும் நடக்கும் செயல்தான். ஆனால் அழகுகலை நிபுணர் மற்றும் ஆடை வடிமைப்பாளர் ஒருவர் தன்னுடைய திறமை மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நாள்தோறும் நாம் வீட்டில் கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுகளை கொண்டு பல்வேறு வகையான ஆடைகள் தயாரித்து அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் அழகுகலை கல்வியாளர் ஜெனிபர்.

ஜெனிபர் தனக்கு தெரிந்த அழகு கலை மற்றும் ஆடை வடிவமைப்பை, ஃபேஷன் துறையில் ஆர்வம் உள்ள பிற பெண்களுக்கு வொர்க்‌ஷாப் மூலம் பயிற்சியளித்து வருகிறார். தன்னிடம் பயிற்சி பெறும் பெண்களை வைத்து ஒவ்வொரு ஆண்டும் பல தீம்களில் மேக்கப் மற்றும் ரேம்ப் வாக் போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களுக்கு சான்றிதழும் வழங்கி வருகிறார். அதே போல் கடந்த 2023ம் ஆண்டு அவரிடம் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட ஆடைகளையே ‘‘trash into treasure” (புதையலாகும் குப்பைகள்) என்னும் பெயரில் கடந்த டிசம்பர் மாதம் புதுவையில் ஒரு ஃபேஷன் ஷோ நடத்தியுள்ளார். இந்த ஃபேஷன் ஷோவில் நாம் வீட்டில் தினமும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள், ஸ்நாக்ஸ் கவர்கள், கருப்பு பாலீத்தீன் கவர்கள், டீ காபி குடிக்க பயன்படுத்தும் கப்புகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இதர பொருட்களையும் மற்றும் தேங்காய் நார், தென்னை மற்றும் பனை ஓலைகள் மூலம் செய்யப்பட்ட தொன்னைகளையும் பயன்படுத்தி பலவகையான ஆடைகளை தயாரித்துள்ளனர். இதில் காட்சி படுத்தப்பட ஆடைகள் அனைத்தும் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும்வகையிலும்,

அதே சமயம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அவர்கள் ஏற்படுத்திய இந்த புதுவகையான விழிப்புணர்வு மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த ஃபேஷன் ஷோவில் பயன்படுத்திய பெரும்பாலான பிளாஸ்டிக் ஆடைகள் அனைத்தும் அதிகபட்சமாக கையால் தைக்கப்பட்டது, அரிசி பைகளால் தைக்கப்பட்ட ‘rice bag dress’ ஆடையும், ஸ்நாக்ஸ் கவர்களால் தைக்கப்பட்ட ‘bingo cover dress’ கருப்பு நிற பாலித்தீன் கவர்களால் தயாரிக்கப்பட்ட ‘plastic cover dress’ போன்ற ஆடைகள் இந்த நிகழ்வில் அதிகம் பார்வையாளர்களை கவர்ந்தன. மேலும், இந்த ஃபேஷன் ஷோ lionize international book of world records 2023-ல் இடம் பெற்றுள்ளது. இந்த லையோனைஸ் அமைப்பு கலைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களுக்கு வெகுமதி வழங்குவதுடன் அவர்களுக்கு தங்களின் சாதனைப் பட்டியலிலும் இடமளித்துள்ளது. இந்த ஃபேஷன் ஷோவை பற்றி ஜெனிபர் குறிப்பிட்டது,

‘எங்களுடைய ஃபேஷன் ஷோவின் முக்கிய நோக்கம், உலக வெப்பமயமாதலை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து தான். நாம் தூக்கி எறியப்படும் மக்காத் தன்மையுடைய பிளாஸ்டிக் பொருட்களை உதாரணத்துக்கு பாலீத்தீன் கவர்கள், பிளாஸ்டிக் ஸ்பூன்ஸ் மற்றும் தட்டுகள் போன்ற இதர பொருட்களை மறுசுழற்சி செய்து அதனை எந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதனை இதன் மூலம் சொல்லியிருக்கோம். மேலும், பிளாஸ்டிக் மறு சுழற்சி எல்லோரும் செய்யறாங்க., அதில் நீங்கள் என்ன புதிதாக செய்றீங்க என கேட்கலாம். நாங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் இதர பொருட்களை ஆடைகளாக வடிவமைச்சிருக்கோம். அதனை ஒரு ஃபேஷன் ஷோவாகவும் நடத்தியிருக்கோம். இதன் மூலம் பல கலைஞர்கள் பங்கேற்று தங்களுடைய திறமையினை வெளிப் படுத்தியுள்ளனர். எங்களுடைய இந்த ஃபேஷன் ஷோவை உலக சாதனையில் பங்கேற்க செய்த லையோனைஸ் அமைப்புக்கு தான் நன்றி சொல்லனும் என குறிப்பிட்டிருந்தார்.
– காயத்ரி காமராஜ்

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்