கரூரில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படும் அமராவதி ஆறு

*விரைந்து அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கரூர் : கரூர் அமராவதி ஆற்றில் அதிகளவு வளர்ந்துள்ள செடி, கொடிகளை விரைந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட பகுதியில் இருந்து அமராவதி ஆறு கரூர் மாநகரம் வழியாக திருமுக்கூடலூர் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதில், கரூர் மாநகரில் சின்னாண்டாங்கோயில், படிக்கட்டுத்துறை, லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளின் வழியாக ஆறு செல்கிறது.

இந்நிலையில், மாநகரத்தின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே அதிகளவு செடி,கொடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. இவை, ஆற்றில் தண்ணீர் வரும் சமயங்களில் தண்ணீரின் போக்கை மாற்றும் திறன் கொண்டதாக உள்ளது. அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள இந்த செடிகளை அவ்வப்போது அகற்ற வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, கரூர் மாநகரின் வழியாக பயணிக்கும் அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள செடி, கொடிகளை விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

யார் துரோகி? எடப்பாடியை சுற்றிவளைத்து தாக்கும் அண்ணாமலை, ஓபிஎஸ்: பதிலடி கொடுக்கும் அதிமுக நிர்வாகிகள்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

நீரிழிவு பெண் நோயாளிகளுக்கு கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

சமூக விரோத செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் கோரிக்கை