திட்டமிட்ட பேச்சுவார்த்தை திடீர் ரத்து; மோடியின் விமர்சனத்தால் புடின் கோபம்: ரஷ்ய அதிகாரி விளக்கம்

மாஸ்கோ: பிரதமர் மோடியின் விமர்சனத்தால் அதிபர் புடின் கோபம் அடைந்ததாகவும், அதனால் திட்டமிட்ட பேச்சுவார்த்தை திடீர் ரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்தியை ரஷ்ய அதிகாரி மறுத்துள்ளார். இந்திய பிரதமர் மோடி, ரஷ்யா – இந்தியா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாஸ்கோ சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து, சர்வதேச விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். ஆனால் மோடியுடன் சென்ற இந்திய குழுவிற்கும், ரஷ்ய குழுவிற்கும் இடையே நடத்தப்பட வேண்டிய திட்டமிட்டப்பட்ட நிகழ்வு ஒன்று ரத்து செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் மோடி கூறிய கருத்துகளால், ரஷ்ய அதிபர் புடினுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதாக சில சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘இரு நாட்டு தூதுக்குழுக்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த அமர்வை ரத்து செய்வது என்பது ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான்’ என்றார். பிரதமர் மோடி ரஷ்யாவில் இருந்த போது, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டனர். இதனை மோடி மறைமுகமாக விமர்சித்தார். அப்பாவி குழந்தைகளின் மரணம், தனது இதயத்தை உடைக்கும் வலி என்று புதினிடம் மோடி கூறினார். மோடியின் இந்த கருத்து புடினை கோபப்படுத்தியதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான அவுன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்

செயில் நிறுவனத்தில் நிர்வாக மற்றும் நிர்வாகம் அல்லாத பணிகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அப்ரன்டிஸ்