விமான டிக்கெட் முன் பதிவு செய்திருந்தும் இருக்கை தராமல் தாய் மகனை தவிக்க விட்ட அதிகாரிகள்: தனியார் விமான நிறுவனம் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி: டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பெண்ணின் குழந்தைகளுக்கு இருக்கை கொடுக்காமல் விமான அதிகாரிகள் தவிக்க விட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் சகாய தேவி. இவர் நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக டெல்லி சென்றார். பின்னர் கடந்த 14-ம் தேதி டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் வருவதற்காக தனக்கும் தனது 2 குழந்தைகளுக்கும் தனியார் விமான சேவை நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.

14-ம் தேதி இரவு டெல்லி விமான நிலையம் சென்றபோது சகாய தேவிக்கு மட்டும் இருக்கை இருப்பதாகவும், மற்ற 2 குழந்தைகளுக்கு இருக்கை இல்லை எனவும் விமான நிறுவன அதிகாரிகள் கூறியதால் சகாய தேவி தவிப்புக்கு ஆளானார். முறையாக டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில் அந்த டிக்கெட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கைகளில் வேறு நபர்களுக்கு கொடுத்து விட்டு தவிக்க விட்டதாக சகாய தேவி புகார் கூறியுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சம்பவத்தால் தனக்கு பெரிய மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்திருக்கிறார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது