பினராயி விஜயனின் மகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் மனு

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்தி வரும் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு தாது மணல் நிறுவனம் ரூ.1.72 கோடி பணம் கொடுத்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இதுவரை முதல்வர் பினராயி விஜயன் இது தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக் கோரி எர்ணாகுளத்தை சேர்ந்த கிரீஷ் பாபு என்பவர் மூவாற்றுபுழா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் கிரீஷ் பாபு நேற்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தாது மணல் நிறுவனத்திடமிருந்து முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் ரூ.1.72 கோடி பணம் வாங்கியதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. எனவே இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா