புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து மறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக மாற்ற தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து புதுக்கோட்டை மாநகராட்சியோடு வாகவாசல், தேக்காட்டூர், முல்லூர், திருக்கட்டளை திருமலைராய சமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பல ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையை சுற்றியுள்ள 11 ஊராட்சியை முதற்கட்டமாக புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நேற்று மறியல் போராட்டம் நடந்தது. இதில் 21 பேரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 92 பேர் கைது செய்யப்பட்டனர். முள்ளூர் கடைவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். செட்டியாப்பட்டி விலக்கு சாலையிலும் மறியல் நடந்தது.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்